துப்பாக்கி தோட்டாக்களை திருடிய ரவுடி கைது


துப்பாக்கி தோட்டாக்களை திருடிய ரவுடி கைது
x

துப்பாக்கி தோட்டாக்களை திருடிய ரவுடி கைது செய்யப்பட்டார்

திருச்சி

திருச்சி தென்னூர் அண்ணாநகர் கண்ணதாசன்சாலையை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவர் உணவு பாதுகாப்புத்துறையில் மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தஞ்சைக்கு சென்றார்.பின்னர் அவர் தஞ்சையில் இருந்து வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த அவரது கைத்துப்பாக்கியின் 21 தோட்டாக்கள் திருடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தில்லைநகர் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவரது வீட்டின் அருகே சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த நபர் யார்? என விசாரித்தபோது, அவர் தென்னூர் வாமடத்தை சேர்ந்த ரவுடி அரவிந்த் (வயது 28) என்பதும், அவர் தான் துப்பாக்கி தோட்டாக்களை திருடினார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.


Next Story