ெரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும்
ெரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த குளத்தேரி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் வழியாக சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, காவேரிப்பாக்கம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றுவருகின்றன. விவசாயிகள், பொதுமக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த மேம்பாலத்தின் கான்கிரீட் உடைந்து சேதமடைந்தது உள்ளது. சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே சேதமடைநத் பகுதிகளை சீரமைத்து, மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று சூரை அருகே உள்ள தரைப்பாலத்திலும் சிலபகுதிகளில் கான்கிரீட் உடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.