காற்றுடன் பெய்த மழையால் நெற்கதிர்கள் சாய்ந்தன
காற்றுடன் பெய்த மழையால் நெற்கதிர்கள் சாய்ந்தன .
புதுக்கோட்டை
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக கோடை கால குறுவை நெல் சாகுபடி மற்றும் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் கடந்த வாரம் இப்பகுதிகளில் காற்றுடன் கூடிய கோடை மழை பெய்தது. அதில் வடகாடு சாத்தன்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணையா என்பவரது 4½ ஏக்கர் இடப்பரப்பில் பயிரிடப்பட்டு இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. இதில் தண்ணீரை உடனடியாக வடிநீர் வசதி செய்து வெளியேற்றியதால் பயிர்கள் முளைத்து விடாமல் தப்பியது. எனினும் வேரோடு சாய்ந்து மழை நீரில் கிடந்ததால் மகசூல் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story