விருத்தாசலத்தில் சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் சார்பதிவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சார் பதிவாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். சார் பதிவாளர்கள் லட்சுமி காந்தன், தாமோதரன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் நல சங்க மாவட்ட செயலாளர் நாட்டுதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். ஆா்ப்பாட்டத்தில் ரியல் எஸ்டேட் சட்டத்தின் படி பிரொமோட்டர் அல்லாத ஏழை எளிய மக்கள் மனைகளாக பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். புதிய பணியிடங்களை ஏற்படுத்தி கொடுப்பதுடன், காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். தமிழக அரசின் இரு மொழி கொள்கைக்கு எதிரான 3-வது மொழி திறனை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 80-ன் படி பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும். பதிவு துறையில் ஏற்கனவே தனியார் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்த வெளி முகாமை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமைச்சு பணியாளர் சங்கம் தர்மராஜ் நன்றி கூறினார்.