திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்


திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 30 Sep 2022 8:00 PM GMT (Updated: 30 Sep 2022 8:01 PM GMT)

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பா.ஜனதா ஆன்மிக பிரிவு மாநில செயலாளர் கூறினார்.

சேலம்

பா.ஜனதா ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சேலம் ஸ்ரீ, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவில் திருப்பணிகள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இன்று வரை 50 சதவீத பணிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. கோவில் தங்கத்தேர் பராமரிப்பின்றி உள்ளது. கோவில் சப்பரம் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் சேதமடைந்து வருகிறது. மின் விளக்குகள் இல்லாததால் கோவில் கோபுரம் இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. திருப்பணிக்கான திட்டத்தை அடிக்கடி மாற்றுவதால், கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே கோவில் திருப்பணியை விரைந்து முடித்து, ஆடிப்பண்டிகை நடைபெறும் போது கும்பாபிஷேகத்தையும் சேர்த்து நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story