தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் தீர்மானம்


தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்  அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் தீர்மானம்
x

தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி

திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பார்சல் அலுவலகம் அருகே எஸ்.ஆர்.எம்.யு.- எச்.எம்.எஸ். கூட்ட அரங்கில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநில மாநாடு நடைபெற்றது. எல்.பி.எப். அகில இந்திய பொருளாளர் நடராஜன் தலைமை தாங்கினார். எச்.எம்.எஸ் மாநில தலைவர் சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் ரெங்கராஜன் முன்னிலை வகித்தனர். எச்.எம்.எஸ். மாநில அமைப்பு செயலாளர் ஜான்சன் வரவேற்றார். எல்.பி.எப். அகில இந்திய பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும். பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் எல்.பி.எப். மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜோசப் நெல்சன் நன்றி கூறினார்.


Next Story