தொடக்கக் கல்வி பட்டய தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது


தொடக்கக் கல்வி பட்டய தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
x

தொடக்கக் கல்வி பட்டய தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது என்று பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆகஸ்டு மாதம் நடைபெற்ற தொடக்கக்கல்வி பட்டய தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளின் தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது. அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தனித் தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இன்று மாலை 3 மணி முதல் கொள்ளலாம்.

மாணவ- மாணவிகளின் விடைத்தாள் நகல் பெற, மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன், விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.275, மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.205 இவ்வலுவலகத்தில் செலுத்தி நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் 14-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story