தோட்டியோட்டில் 1-ந் தேதி நடைபெறும் சாலை மறியலில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்; காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தோட்டியோட்டில் 1-ந் தேதி நடைபெறும் சாலை மறியலில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்; காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x

தோட்டியோட்டில் 1-ந் தேதி நடைபெறும் சாலை மறியலில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

குளச்சல்,

தோட்டியோட்டில் 1-ந் தேதி நடைபெறும் சாலை மறியலில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சாலை மறியல்

களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட வலியுறுத்தி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வருகிற 1-ந் தேதி தோட்டியோடு சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குளச்சல் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குளச்சலில் நடந்தது. நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் சேகர், பேச்சாளர் அந்தோணி முத்து, மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரான்சிஸ், பிராங்கிளின், அந்திரியாஸ், லாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட வலியுறுத்தி வருகிற 1-ந் தேதி தோட்டியோடு சந்திப்பில் நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமான தொண்டர்களை கலந்து கொள்ள செய்வது என முடிவு செய்யப்பட்டது.

Next Story