பாதியில் முடங்கி கிடக்கும் சாலைப்பணி


பாதியில் முடங்கி கிடக்கும் சாலைப்பணி
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகே பாதியில் முடங்கி கிடக்கும் சாலைப்பணி

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம்-கருங்கல் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததையடுத்து நெடுஞ்சாலை துறையினர் சமீபத்தில் குண்டு, குழிகளை சீரமைத்து தார் போட்டனர். ஆனால் மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகே கருங்கல் சாலையில் வளைவான பகுதியில் நீண்ட தூரத்திற்கு பெரிய குண்டும் குழியுமாக காணப்பட்டன. இந்த பகுதி சீரமைக்கப்படாமல் இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது.

இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பகுதியில் சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக சாலையின் பாதி அளவு நீளமாக தோண்டப்பட்டு ஒரு பகுதியில் குறுக்கே பெரிய சிமெண்டு குழாய் வைத்து அடைக்கப்பட்டது. அதன்பின்பு சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

குறுகலான சாலை அடைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. மேலும் அந்த பகுதி வளைவாக உள்ளதால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே தோண்டப்பட்டு பாதியில் முடங்கி கிடக்கும் சாலை பணியை உடனே தொடங்கி முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.


Next Story