வீடு புகுந்து திருடிய கொள்ளையர்கள் பிடிபட்டனர்


வீடு புகுந்து திருடிய கொள்ளையர்கள் பிடிபட்டனர்
x

நெல்லையில் வீடு புகுந்து திருடிய கொள்ளையர்கள் பிடிபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லையில் வீடு புகுந்து திருடிய கொள்ளையர்கள் பிடிபட்டனர்.

தொடர் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தன.

இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் சாந்தகுமார் (வயது 29), மதுரை செக்கானூரணியை சேர்ந்த முருகேசன் மகன் சிவக்குமார் (25) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், அவர்கள் நெல்லை பாளையங்கோட்டை, பெருமாள்புரம் பகுதிகளிலும் வீடு புகுந்து திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து சாந்தகுமார், சிவக்குமார் ஆகியோரை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் காவலில் எடுத்து பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்தனர்.

ரூ.55 ஆயிரம் மீட்பு

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாளையங்கோட்டை டார்லிங் நகர் 3-வது தெருவில் ஒரு வீட்டில் 6 பவுன் நகையும், பெருமாள்புரம் மகிழ்ச்சி நகரில் 2 வீடுகளில் 3 கிராம் தங்க மோதிரம், மடிக்கணினி உள்ளிட்டவைகளையும் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரம் மீட்கப்பட்டது. பின்னர் அவர்கள் மீண்டும் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story