கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம்


கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம்
x

கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தன.

சேலம்

கெங்கவல்லி:

கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருடைய மகன் வெற்றிவேல் (வயது 23). நெல் அறுவடை எந்திர டிரைவர். இவரும், ஆத்தூர் தட்டாஞ்சாவடி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் காசிமணி மகள் கமலி (23) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கூட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி ேபாலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசி சமாதானம் செய்த பின்னர், கமலியை வெற்றி வேலுடன் அனுப்பி வைத்தனர்.

பெரியபுனல்வாசல் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மகன் செல்வா (22). இவர் தலைவாசல் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அதேபோல சாத்தப்பாடி பகுதியை சேர்ந்த காட்டுராஜன் மகள் கவுசல்யா (21) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று புனல்வாசல் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து விட்டு கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.


Next Story