கோபி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கோபி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
ஈரோடு
கடத்தூர்
கோபி அருகே உள்ள கடத்தூர் பீளமேட்டை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மகள் அபிராமி (வயது 22). புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் பூபதி ராஜா (25). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 வருடமாக அபிராமியும், பூபதிராஜாவும் காதலித்து வந்தனர். இதற்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியேறிய காதல் ேஜாடி கோபியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
Related Tags :
Next Story