காதல் திருமணம் செய்த நர்ஸ் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
ஜோலார்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த நர்ஸ் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ேஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ரம்யா (வயது 21). இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடமாக நர்சாக வேலை செய்து வந்த இவர் கடந்த 6 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி சென்னையில் பணிபுரிந்த தனியார் மருத்துவமனையில் நிலுவையில் உள்ள பணத்தை வாங்கி வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ரம்யாவின் தந்தை ரவி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நந்திகேசவன் (24) என்பவருடன் சென்னையில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அதைத்தொடர்ந்து இருதரப்பு பெற்றோர்களை போலீசார் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.