கான்கிரீட் வீட்டின் மேற்கூரை இடிந்தது


கான்கிரீட் வீட்டின் மேற்கூரை இடிந்தது
x

நாகூரில் கான்கிரீட் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகளுடன் மாற்றுத்திறனாளி உயிர்தப்பினார்.

நாகப்பட்டினம்

நாகூரில் கான்கிரீட் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகளுடன் மாற்றுத்திறனாளி உயிர்தப்பினார்.

கான்கிரீட் வீடுகள்

நாகையை அடுத்த நாகூர் அம்பேத்கர் நகர் பகுதியில் சுனாமியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த 2005-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இ்ந்த வீடுகள் அடிக்கடி பழுதடைந்து கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

நாகூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாற்றுத்திறனாளி வினோதினி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கான்கிரீட் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வினோதினி தனது குழந்தைகளுடன் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

மேற்கூரை இடிந்து விழுந்தது

அப்போது அருகில் உள்ள அறையில் பயங்கர சத்தத்துடன் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வினோதினி தனது 2 குழந்தைகளுடன் வீட்டை வீட்டு வெளியேறினார். இதனால் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அவர் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேற்கூரை இடிந்து வீட்டின் அறைக்குள் காரைகள் கிடந்ததால் அங்கிருந்து பொருட்கள் அனைத்து சேதமடைந்தன.

அதனால் யாரும் வீட்டிற்குள் செல்லவில்லை. இரவு வீட்டிற்கு வெளியே தூங்கினர்.

மாற்று இடம் வேண்டும்

இதுகுறித்து வினோதினி கூறுகையில், இந்த பகுதியில் கான்கிரீட் வீடுகள் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் வீடுகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுைற புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மழைகாலம் தொடங்குவதற்கு முன்பு அப்பகுதியில் கான்கிரீட் வீட்டில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என்றார்.


Next Story