மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண்கள் காயம்
ஆம்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது
ஆம்பூர் சின்ன மசூதி தெருவில் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் இயங்கி வருகிறது. இந்த மண்டபத்தில் ஆம்பூரை சேர்ந்த ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் உறவினர்கள் கலந்துகொண்டனர். அப்போது இரவு சுமார் 10 மணி அளவில் பெண்கள் அமர்ந்திருந்த பகுதியில் மண்டபத்தின் மேற்கூரை (பால்சீலிங்) பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் சிலர் அங்கிருந்து கூச்சலிட்டபடி தப்பி வெளியே ஓடினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. சில நிமிடங்களில் அனைத்து பகுதியும் அடுத்தடுத்து சரிந்து விழுந்துள்ளது. அப்போது உள்ளே இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் இருந்தவர்கள் மண்டபத்திற்குள் சென்று பலரை பத்திரமாக மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
இந்த சம்பவத்தில் சில பெண்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஆம்பூலன்ஸ் மூலம் ஆம்பூர் ஆரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்குசிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி தகவலறிந்ததும் ஆம்பூர் தாசில்தார் மகாலட்சுமி மற்றும் ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.