வீட்டின் கூரை உடைந்து விழுந்து தொழிலாளி சாவு


வீட்டின் கூரை உடைந்து விழுந்து தொழிலாளி சாவு
x

வீட்டின் கூரை உடைந்து விழுந்து தொழிலாளி சாவு

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே உள்ள மேக்காடு வாறுவிளை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 62), கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் வள்ளவிளை பகுதியில் ஒரு வீட்டில் சீரமைப்பு பணிக்கு சென்றார். அங்கு வீட்டின் மேற்கூரையின் மேல் ஏறி ஆஸ்பெக்டாஸ் ஷீட்டுகளை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டு உடைந்தது. இதில் பாலகிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அவரை சக தொழிலாளர்கள் மீட்டு பாறசாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி லில்லிபாய் (52) கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story