திருச்செந்தூர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து தொழிலாளி பலி


திருச்செந்தூர் அருகே  வீட்டின் மேற்கூரை இடிந்து தொழிலாளி பலி
x

திருச்செந்தூர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து தொழிலாளி பலியானார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து தொழிலாளி பலியானார்.

பழைய வீட்டை புதுப்பித்தபோது...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் ெரயில்வே கேட் அருகில் லிக்டன் என்பவருக்கு சொந்தமான பழமையான வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அதன்படி பழைய வீட்டின் மேற்கூரை, ஜன்னல் போன்றவற்றை இடித்து அகற்றும் பணிகள் நேற்று நடைபெற்றது.

இந்த பணியில் நெல்லை மாவட்டம் முக்கூடல் சிங்கம்பாறையைச் சேர்ந்த ஜெயராஜ் (வயது 55) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

மேற்கூரை இடிந்து...

நேற்று மாலையில் பழைய வீட்டின் தரைத்தளத்தில் நின்றவாறு மேற்கூரையை ெஜயராஜ் கடப்பாரையால் இடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து ஜெயராஜின் மீது விழுந்தது.

இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இறந்த ஜெயராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story