தீயில் எரிந்து கூரை வீடு சாம்பல்
பிரிஞ்சிமூலையில் தீயில் எரிந்து கூரை வீடு சாம்பலானது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சிமூலை கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது50) என்பவரின் கூரை வீடு நேற்று முன்தினம் இரவு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
Related Tags :
Next Story