பள்ளி வகுப்பறை கூரை பெயர்ந்து விழுந்தது


பள்ளி வகுப்பறை கூரை பெயர்ந்து விழுந்தது
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே பள்ளி வகுப்பறை கூரை பெயர்ந்து விழுந்தது. இதனால் மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் அரசுப்பள்ளி உள்ளது. இங்கு இளஞ்செம்பூர், கண்டிலான், பூக்குளம், மாரந்தை, வீரம்பல் உள்ளிட்ட கிராமப் பகுதியில் இருந்து 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் பள்ளியின் ஒரு வகுப்பறையில் உள்ள கான்கிரீட் மேற்கூரையில் தண்ணீர் கசிந்து இருந்தது.

இந்த நிலையில் மதியம் 1 மணியளவில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் சாப்பிட சென்றிருந்தனர். அந்த நேரத்தில் வகுப்பறை மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென ெபயர்ந்து மாணவர்கள் அமரும் பெஞ்ச் மீது விழுந்தது. நல்லவேளையாக மாணவர்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அந்த வகுப்பறையில் இன்னும் சில இடங்களில் மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் இருந்ததால் அந்த அறை உடனடியாக மூடப்பட்டது. இதையடுத்து 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மரத்தின் அடியில் வைத்து பாடம் நடத்தப்பட்டது. இது குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்தது.


Next Story