மழையால் வீட்டின் மேற்கூரை ஓடுகள் சரிந்து விழுந்தன
மழையால் வீட்டின் மேற்கூரை ஓடுகள் சரிந்து விழுந்தன.
விராலிமலை:
விராலிமலை தாலுகா தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் ஆறுமுகத்தின் வீட்டின் மேல் கூரையானது சேதமடைந்து விழும் நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு சுதாரித்துகொண்ட ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே வீட்டின் மேற்கூரையிலிருந்து ஓடுகள் சரிந்து கீழே விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர் ஆறுமுகத்திற்கு ஆறுதல் கூறி, அரசு வழங்கும் நிவாரண தொகை கிடைக்க பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர்.