பொய்கை வாரச்சந்தையில் கறவை மாடுகள் விற்பனை அமோகம்


பொய்கை வாரச்சந்தையில் கறவை மாடுகள்  விற்பனை அமோகம்
x

பொய்கை வாரச்சந்தையில் கறவை மாடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கினர்.

வேலூர்

அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்கை ஊராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மாலையில் காய்கறி சந்தையும் நடக்கிறது. ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மேல் இந்த சந்தையில் வர்த்தகம் நடக்கிறது.

கடந்த 4 வாரங்களாக வாரச்சந்தையில் மாடுகள் குறைந்த அளவே விற்பனைக்கு வந்தன. ஆனால் இந்த வாரம் நடந்த வாரச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு கறவை மாடுகளை வாங்கினார். இதனால் இந்த வாரம் வியாபாரம் களைகட்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

விற்பனை செய்யப்பட்ட கறவை மாடுகளில் உயர் ரக கறவை மாடுகளை அதிகளவில் வியாபாரிகள் வாங்கினர். மாலையில் காய்கறி சந்தை நடந்தது. ஒரு கிலோ தக்காளி மற்றும் கத்தரிக்காய் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையானது.


Next Story