திருமருகல் பகுதியில் மண்பானை விற்பனை மந்தம்


திருமருகல் பகுதியில் மண்பானை விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் பகுதியில் மண்பானை விற்பனை மந்தமாக நடந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி ப.கொந்தகை, கணபதிபுரம் திருச்செட்டாங்குடி, திருக்கண்ணபுரம், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மண்பாண்டங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தயாரிக்கப்பட்ட பொங்கல் பானை, அடுப்பு, சட்டி ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். பொங்கலையொட்டி திருமருகல் பகுதியில் பொங்கல் மண்பானை விற்பனை நடந்து வருகிறது. தற்போது சிலர் வீடுகளில் கியாஸ் அடுப்புகளில் சில்வர், பாத்திரங்களில் பொங்கல் வைக்கின்றனர். இதனால் மண்பானை விற்பனை மந்தமாக உள்ளது. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஆனால் விற்பனை மந்தமாக உள்ளது. பொதுமக்களிடம் பானை வாங்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது மண்பாண்ட தொழில் நலிந்து வருகிறது. எனவே இந்த மண்பாண்ட தொழிலுக்கு அரசு உதவி செய்து அவர்களது வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்றனர்.


Next Story