திடீரென நிறம் மாறிய கடல்
மண்டைக்காடு பகுதியில் திடீரென நிறம் மாறிய கடல்
மணவாளக்குறிச்சி,
குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதிகளான மணவாளக்குறிச்சி, சின்னவிளை, பெரியவிளை, மண்டைக்காடு, புதூர், கொட்டில்பாடு உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக திடீரென கடலின் நிறம் மாறி மாறி காணப்படுகிறது. அதன்படி கடற்கரையையொட்டி பகுதிகளில் செம்மண் நிறமாக காட்சி தருகிறது. பெரும் மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சேறு, சகதிகளுடன் கடலில் கலந்தால் எப்படி இருக்குமோ அதைவிட அதிகமாக கடலின் தன்மை மாறி காணப்படுகிறது. இது அப்பகுதி மக்களையும், மண்டைக்காடுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளையும் அச்சத்துக்குள்ளாக்கி உள்ளது.
இதுபற்றி புதூரை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில் குமரி மாவட்டத்தில் இப்போது பெருமழை இல்லை. ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் இல்லை. தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதால் தான் இந்த மாற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் கடல் மாசுபட்டு விட்டால் கடற்கரை கிராமங்களின் சூற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, ஆபத்தான கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மீனவர்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.