புலியை தேடும் பணி தீவிரம்
பசுமாடுகளை அடித்து கொன்ற புலியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பந்தலூர்,
தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் தாலுகா பாட்டவயல் பகுதி உள்ளது. அங்கிருந்து சுல்தான்பேத்தேரிக்கு செல்லும் சாலையோரத்தில் புலி நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதற்கிடையே புலி பசு மாடுகளை கடித்து கொன்றது. அப்பகுதி 3 மாநில வனப்பகுதி இணையும் இடமாக உள்ளது. புலி பசுமாடுகளை அடித்து கொன்றதால், புலியை பிடிக்க கோரி வயநாடு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் கீதா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தது. முத்தங்கா வனவிலங்கு சரணாலய இயக்குனர் ஹப்துல் ஹசீஸ் தலைமையில், 50 வனத்துறையினர் 16-ந் தேதி அதிவிரைவு படையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சோர்வுடன் காணப்பட்ட புலி பதுங்கி உள்ளதா என வனப்பகுதியில் தேடி வருகின்றனர். நேற்று 2-வது நாளாக புலியை பிடிப்பதற்காக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து கேரளாவில் சீரால் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாட்டவயல் பகுதியில் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்ஷன் வனகாப்பாளர் மில்டன்பிரபு மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.