40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்


40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்
x

நாடாளுமன்ற தேர்தலை அடுத்த மாதமே நடத்தினாலும் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

விருதுநகர்


நாடாளுமன்ற தேர்தலை அடுத்த மாதமே நடத்தினாலும் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மே தினம்

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முதலாக 100 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சிங்காரவேலர் மே தினத்தை கொண்டாடினார். அந்த வகையில் 100-வது ஆண்டு மேதினம் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கக்கூடிய தொழிலாளர் வர்க்கத்தினருக்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்த போது அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். ஆனால் திரும்ப பெற வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தினோம். அந்த வகையில் அவர் தற்போது மசோதாவை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

40 தொகுதிகளிலும் வெற்றி

பா.ஜ.க. அரசு அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவடி தூக்கிக் கொண்டு இருக்கிறது. எனவே மத்தியில் பா.ஜ.க. அரசு அகற்றப்பட வேண்டும் என மே தின நாளில் உறுதி ஏற்போம்.

நாடாளுமன்ற தேர்தல் 6 மாதத்திற்கு முன்பே நடத்தப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலை அடுத்த மாதமே நடத்தினாலும் தமிழகத்தில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. நாடு முழுவதும் இதே நிலைதான் ஏற்படும். கர்நாடகத்திலும் பா.ஜ.க. தோல்வியடைவது உறுதி.

மதுபான கடை

தானியங்கி எந்திரங்கள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்வது என்பது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் மதுபான கடைகளை படிப்படியாக மூட வேண்டும்.

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் சமமான சமுதாயம் உருவாக வேண்டும் என்பது போல சாதீய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலை உருவாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story