சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 361 பேர் எழுதினர்
திருப்பத்தூரில் 2-வதுநாளாக நடந்த சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 361 பேர் எழுதினர்
திருப்பத்தூர்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி, வாணியம்பாடி பிரியதர்ஷினி கல்லூரி, இஸ்லாமிய கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் 2 நாட்கள் நடந்தது. இரண்டாவது நாளாக திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 464 பேர் தேர்வு எழுத இருந்தனர். அதில் 361 பேர் பேர் தேர்வு எழுதினர். 65 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில், இரண்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தேர்வு எழுத வந்த போலீசார் மற்றும் பட்டதாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்கு நல்ல சேவை புரிய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.
Related Tags :
Next Story