புகையிலை பொருட்கள் விற்றவர் சிக்கினார்


புகையிலை பொருட்கள் விற்றவர் சிக்கினார்
x

தேனி அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் சிக்கினார்

தேனி

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில் போலீசார் அந்த கடையில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்து 99 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடுவிலார்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த சுந்தர் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.


Next Story