விற்பனை விலையை கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும்


விற்பனை விலையை கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும்
x

சர்க்கரையில் குறைந்த பட்ச விற்பனை விலையை கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

விருதுநகர்

சர்க்கரையில் குறைந்த பட்ச விற்பனை விலையை கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஏற்றுமதிக்கு தடை

தேசிய அளவில் சர்க்கரையின் தேவை 27.5 மில்லியன் டன்னாக உள்ள நிலையில் உற்பத்தி 32.8 மில்லியன் டன்னாக உள்ளது. இந்தநிலையில் உள்நாட்டு தேவைக்கு தேவையான சர்க்கரை உள்ள நிலையில் மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை ஏதும் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என சர்க்கரை ஆலை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்றுமதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 61 லட்சம் டன் சர்க்கரை ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டு விட்ட நிலையில் உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு ஏற்றுமதிக்கு தடை ஏதும் விதிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றம் இல்லை

தனியார் சர்க்கரை ஆலை சங்கத்தினரும், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைப்பினரும் குறைந்தபட்ச சா்க்கரை விற்பனை விலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளனர்.

தற்போது மத்திய அரசு சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனைவிலை கிலோ ரூ.31 ஆக நிர்ணயித்துள்ளது. கடந்த 2018-2019-ம் ஆண்டில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதன் பின்பு இதில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் இதனை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விலை நிர்ணயம்

தனியார் சர்க்கரை ஆலை அமைப்பினர் கிலோ ரூ.38 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். தேசிய கூட்டுறவு சர்க்கரைஆலை கூட்டமைப்பினர் எஸ் கிரேடு சர்க்கரை கிலோ ரூ.37.20 ஆகவும், எம்.கிரேடு சர்க்கரை ரூ.38.20 ஆகவும், எல்.கிரேடு சர்கரை ரூ.39.70 ஆகவும் விலைநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் கரும்புக்கு குவிண்டால் ரூ.305 கொடுக்கப்படும் நிலையில் சர்க்கரையின் விற்பனை விலையை அதிகரித்து நிர்ணயிக்க வேண்டியது அவசியமாக உள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளதாக சர்க்கரை வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.


Next Story