சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
வீரபாண்டி
திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இடுவம்பாளையம் பகுதியில் இருந்து முருகம்பாளையம் செல்லும் சாலையில் அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் அதிக அளவில் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இச்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனம் சென்று விரிகிறது. இந்த சாலையில் 4-ம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் சாலையோரம் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் கழிவு நீரானது சாலை நடுவில் தேக்கமடைந்து பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ளது. கழிவுநீர் சாலை நடுவில் தேக்கமடைவதால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சாலையின் நடுவே சாக்கடை கழிவுகள் தேக்கமடையாதவாறு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-------------