துப்பாக்கி சுடுதல் பயிற்சி அளித்தவர் சிக்கினார்
நெல்லையில் கல்லூரி மாணவருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி அளித்தவர் போலீசாரிடம் சிக்கினார்.
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பு பாலபாக்கியா நகரை சேர்ந்தவர் வெள்ளை சுந்தர் (வயது 34). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி அளிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கல்லூரி மாணவரை கைது செய்தனர். வெள்ளை சுந்தரை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் அவரை கோவாவில் வைத்து கைது செய்தனர். இவரை விரைவில் நெல்லை அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story