கடை உரிமையாளர் தற்கொலை


கடை உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் கடை உரிமையாளர் தற்கொலை செய்தார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் கடையம் ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பவர் செட்டியூரை சேர்ந்த கருத்தபாண்டி நாடார் மகன் சக்திவேல் (வயது 44). இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். சக்திவேல் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 11-ந் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story