புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
திட்டச்சேரியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திட்டச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன் ஆகியோர் திட்டச்சேரி, மரைக்கான்சாவடி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது மரைக்கான்சாவடி மெயின் ரோட்டில் ராஜசேகர் மனைவி கோமதி (வயது 31) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கடைக்கு 'சீல்' வைத்தார்.மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story