கூடுதலாக பானிபூரி கேட்டு தராததால் வியாபாரிக்கு கத்திக்குத்து


கூடுதலாக பானிபூரி கேட்டு தராததால் வியாபாரிக்கு கத்திக்குத்து
x

வேடசந்தூரில், கூடுதலாக பானிபூரி கேட்டு தராததால் வியாபாரியை தொழிலாளி கத்தியால் குத்தினார்

திண்டுக்கல்

வேடசந்தூர் ஆத்துமேட்டில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல்சிங் (வயது 23) பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். வேடசந்தூர் மினுக்கம்பட்டி தனியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்யும் ஒடிசாவை சேர்ந்த சுஜித்குமார் (26) ராகுல்சிங் கடைக்கு வந்து பானிபூரி வாங்கி சாப்பிட்டார். அப்போது கூடுதலாக ஒரு பானிபூரி கேட்டதாக தெரிகிறது.

அதற்கு ராகுல்சிங் கொடுக்க மறுத்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சுஜித்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் ராகுல்சிங்கின் கை மற்றும் உடலில் குத்திவிட்டு தப்பி ஓடினார். காயமடைந்த ராகுல்சிங்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் சுஜித்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story