வங்கியில் ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்
வங்கியில் ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை
ஆற்காடு பகுதியில் ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியியில் ஏற்கனவே 4 ஊழியர்கள் பணியாற்றினர். தற்போது 2 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஊழியர்கள் பற்றாக்குறையால் பணப் பரிவர்த்தனை, பயிர்க்கடன், கறவை மாட்டுக்கடன் எனப் பல்வேறு நடவடிக்கைகளுக்காக வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் ஊழியர்களை நியமித்து வாடிக்கையாளர்களின் சிரமத்தைப் போக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story