தனியார் நிறுவனத்தை ஆடு, மாடுகளுடன் விவசாயிகள் முற்றுகை


தனியார் நிறுவனத்தை ஆடு, மாடுகளுடன் விவசாயிகள் முற்றுகை
x

பொதுபாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்த தனியார் நிறுவனத்தை ஆடு, மாடுகளுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே குக்கலப்பள்ளி கிராமத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த ஒரு சமூகத்தினருக்கு சொந்தமாக 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர்கள் விவசாய நிலங்களுக்கு இடையே பொதுபாதையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு முன்பகுதியில் உள்ள விவசாய நிலம் விற்கப்பட்டு அங்கு ஒரு தனியார் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுபாதையை ஆக்கிரமித்து அந்த நிறுவனம் சுற்றுச்சுவர் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் நேற்று, ஆடு, மாடுகளுடன் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர், சூளகிரி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தனியார் நிறுவனத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story