தனியார் நிதி நிறுவனம் முற்றுகை


தனியார் நிதி நிறுவனம் முற்றுகை
x

நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவர் சொந்தமாக கார் வாங்குவதற்காக நெல்லை டவுனில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தை அணுகி கடன் வாங்கி உள்ளார். அதில், குறிப்பிட்ட தொகையை அவர் திருப்பி செலுத்தவில்லை. இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தினர் கடந்த மாதம் அவரது வீட்டுக்கு சென்று அந்த பணத்தை கேட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தன்னுடைய கார் கண்ணாடியை நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காரின் உரிமையாளர் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் செய்வதாக கூறி நேற்று அவர் தனது ஆதரவாளர்களுடன் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story