ஆடி பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம்
வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் ஆடி பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் ஆடி பெருவிழா மற்றும் பிரம்மோற்சவ விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. வேலூர் உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, மற்றும் பள்ளிகொண்டா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி வரவேற்று பேசினார்
கூட்டத்தில் ஆடி முதல் வெள்ளி முதல் ஒன்பதாம் வெள்ளி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மூன்றாம் வெள்ளியை அடுத்து வரும் சனிக்கிழமை முதல் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. அப்போது தேர் பவனி வர இருப்பதால் தேர் செல்லும் பாதைகளை சீரமைக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். பெண் பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்ய வருவார்கள். அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் பாதுகாப்பாக இருக்க போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
முடிவில் கோவில் மேலாளர் பாபு நன்றி கூறினார்.
கூட்டம் முடிந்தவுடன் கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேர் மற்றும் தேர் செல்லும் பாதையில் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.