பந்தலூரில் நீதிமன்றம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு


பந்தலூரில் நீதிமன்றம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூரில் நீதிமன்றம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் குற்றவியல் நடுவர ்நீதிமன்றம் இயங்கி வருகிறது. இதனால் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனால் விளையாட்டு ம ைதானம் அருகே நீதிமன்ற கட்டிடம் கட்ட நீதித்துறையும் வருவாய்துறையும் இடத்தை தேர்வு செய்தது. விளையாட்டு மைதானத்தையொட்டி இடம் தேர்வு செய்யப்பட்டதால் விளையாட்டு வீரர்களும் சமூக நல ஆர்வலர்களும் பொதுமக்களும் அதிருப்தி அடைந்தனர். விளையாட்டு மைதானத்தை யொட்டி நீதிமன்ற கட்டிடம் கட்ட கூடாது என்றும், வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் நீதிபதிக்கு மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து பந்தலூர் புதிய பஸ் நிலையத்திலிருநந்து அட்டி செல்லும் சாலையில் அய்யப்பன் கோவில் அருகே வருவாய்துறைக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேலுமணி ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தாசில்தார் நடேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அமுதா, சித்ரா திருஞானசம்பந்தம், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story