மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பு பிடிபட்டது


மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பு பிடிபட்டது
x

மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பு பிடிபட்டது

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரின் மோட்டார் சைக்கிளை நெல்லை சாலை குமாரசாமி கோவில் அருகே நிறுத்தி இருந்தார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் பாம்பு ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராஜா உத்தரவின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் புகுந்து இருந்த 2 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story