கல்குவாரிக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது


கல்குவாரிக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
x

கல்குவாரிக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம், ஈரோடு சாலையில் உள்ள உழைப்பாளி நகர் அருகே தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் குவாரியில் உள்ள ஒரு எந்திரத்தில் பாம்பு ஒன்று சிக்கி கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, எந்திரத்தில் சிக்கிய 5 அடிநீள நாகப்பாம்பை லாவகமாக பிடித்து சென்று வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Next Story