வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
திருவாடானை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது,
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை அருகே உள்ள பாரதிநகர் 2-வது தெருவில் வசித்து வரும் பழனி என்பவர் வீட்டிற்குள் சமையல் கியாஸ் சிலிண்டர் அடியில் பாம்பு இருப்பதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.. இதேபோல் திருவாடானை அருகே உள்ள ஆ.வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் சென்றனர்.
Related Tags :
Next Story