வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது


வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
x

புளியங்குடி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி சிந்தாமணி வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). விசைத்தறிக்கூடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலையில் வீட்டின் கூரையில் பாம்பு இருப்பதை பார்த்து பதறிய அனைவரும் வீட்டில் இருந்து வெளியில் வந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். வீட்டின் கூரையில் பதுங்கி இருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்து கோட்டைமலை வனப்பகுதியில் விட்டனர்.


Related Tags :
Next Story