டீ மாஸ்டரின் ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு விழுப்புரத்தில் பரபரப்பு


டீ மாஸ்டரின் ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு  விழுப்புரத்தில் பரபரப்பு
x

விழுப்புரத்தில் டீ மாஸ்டரின் ஸ்கூட்டருக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவர் விழுப்புரம்-சென்னை சாலையில் உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். சரவணன் நேற்று வழக்கம்போல் ஸ்கூட்டரில் டீ கடைக்கு வந்தார். பின்னர் அவர் ஸ்கூட்டரை டீ கடை முன்பு உள்ள ஒரு மரத்தடியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் மதியம் டீ கடை முன்பு நின்று சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் இருந்து 6 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று திடீரென கீழே விழுந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இதனிடையே அந்த பாம்பு சரவணனின் ஸ்கூட்டருக்குள் புகுந்து கொண்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் இதுபற்றி விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஸ்கூட்டரின் சீட் கவர்களை கழற்றி உள்ளே பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக பிடித்து, அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story