ஆழ்வார்திருநகரி் மெயின் ரோட்டில் நடனமாடிய பாம்புகளால் பரபரப்பு


ஆழ்வார்திருநகரி் மெயின் ரோட்டில் நடனமாடிய பாம்புகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி் மெயின் ரோட்டில் நடனமாடிய பாம்புகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை அருகே ஆழ்வார்திருநகரியில் திருச்செந்தூர்- நெல்லை மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் 2 பாம்புகள் பின்னிப்பிணைந்து அழகிய நடனமாடின. இதை கவனித்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவற்றுக்கு இடையூறு செய்யாமல் கண்டு களித்தனர். அந்த ரோட்டில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரோட்டில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது. ஏராளமானோர் அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரத்தில் அந்த பாம்புகள் தனித்தனியாக தாமிரபரணி ஆற்று பகுதிக்கு சென்று விட்டன. பின்னர் அந்த ரோட்டில் போக்குவரத்து நடந்தது.


Next Story