பேரூராட்சி முன்னாள் தலைவரின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை


பேரூராட்சி முன்னாள் தலைவரின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
x

பேரூராட்சி முன்னாள் தலைவரின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

பேரணாம்பட்டு டவுன் கலைஞர் நகரை சேர்ந்தவர் வாசுகி பாண்டியன். முன்னாள் பேரூராட்சி தலைவர். இவரது மகன் அருண் பாண்டியன் (வயது 36). இவர் வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடி போதையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி சரிகா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று பகல் அருண் பாண்டியன் தனது அறை கதவை நீண்ட நேரமாகியும் திறக்காததலால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் சென்று பார்த்த போது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

இது குறித்து அவரது தாயார் வாசுகி பாண்டியன் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் வழக்குப் பதிவு செய்து அருண் பாண்டியன் உடலை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story