விவசாயியை தாக்கிய மகன்


விவசாயியை தாக்கிய மகன்
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அருகே விவசாயியை தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

உடன்குடி அருகே உள்ள அழகப்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 83). விவசாயி. இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவருக்கு சொந்தமான 12 ஏக்கர் இடத்தை இஸ்ரோ ராக்கெட் தளத்திற்கு அரசு எடுத்துள்ளது. இதற்கு அரசு ரூ.50லட்சம் பணம் கொடுத்ததாகவும், அதில் ரூ.30 லட்சத்தை மகன், மகள்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, மீததொகையை உடன்குடியிலுள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு வங்கியிலிருந்து ரூ.2 லட்சம் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அதில் தனக்கும் பணம் தரவேண்டும் என்று வேல்மயில் என்ற மகன் கேட்டுள்ளார். இதை கண்டித்ததால் தந்தை, மகனுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் மோட்டார் ைசக்கிளில் உதிரமாடன்குடியிருப்பு அருகிலுள்ள கருமேனி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற வேல்மயில் அவரை சுத்தியலால் தாக்கிவிட்டு ஓடிவிட்டாராம். இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story