வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டு தர வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு தாய் கோரிக்கை


வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டு தர வேண்டும்    மத்திய, மாநில அரசுகளுக்கு தாய் கோரிக்கை
x

வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டு தர வேண்டும் என அவருடைய தாய் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர்

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் ரகுபதி(வயது 25). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏஜென்ட் ஒருவர் மூலம் டிரைவர் வேலைக்கு குவைத் நாட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு டிரைவர் வேலை கொடுக்காமல் வீட்டு வேலை செய்ய கூறி சிலர் கொடுமைப்படுத்தி வருவதாகவும், தன்னை மீட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை எனவும் செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சமூக வலைத்தளம் மூலம் தன்னை சிலர் கொடுமைப்படுத்துவதோடு, உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த ரகுபதியின் தாய் கொளஞ்சியம்மாள் ஏஜெண்டை தொடர்பு கொண்டு தனது மகனை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த ஏஜெண்ட் ரூ.1½ லட்சம் கொடுத்தால் உங்களது மகனை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும் என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து கொளஞ்சியம்மாள் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் எனது மகனை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என கண்ணீர் மல்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story