கல்லால் தாக்கி கொல்ல முயன்ற மகன் அதே கல்லை தூக்கிப்போட்டு கொலை


கல்லால் தாக்கி கொல்ல முயன்ற மகன் அதே கல்லை தூக்கிப்போட்டு கொலை
x

மது அருந்த பணம் கேட்டு கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ய முயன்ற மகனை அதே கல்லால் தலையில் போட்டு கொன்ற தந்தையை போலீார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

மது அருந்த பணம் கேட்டு கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ய முயன்ற மகனை அதே கல்லால் தலையில் போட்டு கொன்ற தந்தையை போலீார் கைது செய்தனர்.

கட்டிட மேஸ்திரி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு மதன் (19 வயது) உள்பட 2 மகன்கள்.

இவர்களில் மதன், கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். தினமும் கஞ்சா, குடிபோதையில் வரும் மதன் தாய், தந்தை, தம்பியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடிபோதையில் வந்த மதன் தந்தை செந்தில்குமாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அப்போது பணம் தர செந்தில்குமார் மறுத்ததால் கீழே கிடந்த கல்லை போட்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

அதன்பின் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென கீழே கிடந்த மதன் தூக்கி போட முயன்ற போது அந்த கல்லை தந்தை செந்தில்குமார் பறித்து மகன் மதன் தலையில் போட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மதனை உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனை சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக அவர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மதன் இறந்து விட்டார்.

கைது

இதுகுறித்து ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து மகனை கல்லைப் போட்டுக் கொன்ற தந்தை செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ============


Next Story