இலங்கை கடற்படை தொந்தரவால்குறைந்த படகுகளே மீன்பிடிக்க சென்றன


இலங்கை கடற்படை தொந்தரவால்குறைந்த படகுகளே மீன்பிடிக்க சென்றன
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இலங்கை கடற்படை தொந்தரவால் குறைந்த படகுகளே மீன்பிடிக்க சென்றன.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தமிழகத்திலேயே அதிகமான மீன்பிடி படகுகளை கொண்டது ராமேசுவரம்தான். இங்கு மட்டும் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் உள்ளன.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலும் மீன்கள் இனப்பெருக்க கால சீசனாக உள்ளதால் இந்த சீசனில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் இந்த ஆண்டின் 61 நாள் மீன்பிடி தடைகால சீசன் வருகிற 14-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது.

தடைக்காலம் தொடங்க இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையிலும், இலங்கை கடற்படை தொந்தரவாலும் முன்கூட்டியே மீன்பிடிக்க செல்வதை ராமேசுவரம் மீனவர்கள் தவிர்த்து விட்டனர். 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் உள்ள ராமேசுவரத்தில் நேற்று பாதியளவு படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றன. சுமார் 400 விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. இது பற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறும் போது, "மீன்பிடி தடைக்கால சீசன் தொடங்க இன்னும் 4 நாள் இருந்தாலும், இலங்கை கடற்படையினர் தொந்தரவால் ராமேசுவரத்தில் ஏற்கனவே இலங்கை கடற்படையினர் தாக்குதலும் சிறைபிடிப்பு சம்பவங்களும் அதிகமாக நடைபெற்று வருகிறது, என்றார்.


Next Story