உதவித்தொகையைரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும்


உதவித்தொகையைரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும்
x

உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிககை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரத்தில் நேற்று உயர வளர்ச்சி தடைபட்டோர் தினத்தை முன்னிட்டு அச்சங்கத்தின் மாவட்ட சிறப்பு கிளை கூட்டம் மாவட்டக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் முருகன், துணைச்செயலாளர் முத்துவேல் ஆகியோர் கலந்துகொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் புதிய தலைவராக லாவண்யா, செயலாளராக திருநாவுக்கரசு, பொருளாளராக கார்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனம் உள்ளவர்களாக அறிவித்து, அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கான சிறப்பு வசதிகளுடன் வீடுகள் வழங்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் இலவச பயணம் செய்திட அரசு சலுகை வழங்க வேண்டும் என அம்மனுவில் கூறியிருந்தனர்.


Next Story